Introtuction / அறிமுகம்

  • சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்ட அனைத்து வருமான மூலகங்களிலிருந்து உச்ச அளவில் வருமானத்தை மதிப்பிட்டும். புதிய வருமான மூலகங்களை உருவாக்குவதற்கான வினைத்திறன் மிக்க நிதிச் செயற்பாடுகளை முன் மொழிந்து சபையின் வருமான கட்டமைப்பை மேம்பட்ட அளவில் நிலைநிறுத்தி நிலைவையற்ற வருமான அறவீட்டை உறுதிப்படுத்தும் வருமானப்பிரிவு.
  • பிரிவின் பொறுப்பாளர்

    Assesment Unit

    வருமான பிரிவின் பொறுப்பாளர்

    மைதான அனுமதி கோறல்
    தற்காலிகமாக வீதியினை பயன்படுத்த அனுமதி கோறல்
    கொள்களன்களை பயன்படுத்தல்
    சோளை வரி

    பிரிவின் உத்தியோகத்தர்கள்

    Image Name Designation service Unit Subject
    Subject Assistant Image Mrs. R.S Rameesha Subject Assistant Dept Assesment Unit check
    Subject Assistant Image Mrs. A.L Noorul Iyen Subject Assistant Dept Assesment Unit கட்டிட விண்ணப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
    Subject Assistant Image Mr. M.A.M Firnas Subject Assistant Dept Assesment Unit ஆதன பிரிவின் பொறுப்பாளரின் உதவியாளர்

    Street Line Certificate பெற தேவையான ஆவணங்கள்

    1. கோரிக்கை கடிதம் (Request Letter )
    2. காணியின் உறுதி (Deed-Original and Photo Copy)
    3. நில அளவைப்படம் (Survey Plan- Original and 2 Photo Copy)
    4. வரலாற்றுத்தாள் (History Sheet - 30 வருடம் Original and Photo Copy)
    5. ஆதன வரி பற்றுச்சீட்டு (Assesmemt Tax Reception) photo copy
    6. தேசிய அடையாள அட்டை (NIC) photo copy
    7. விண்ணப்பப் படிவம் (Application Form)
  • குறிப்பு: காணி உரிமையாளர் சமூகமளிக்க வேண்டும்
  • குத்தகை விபரங்கள்

  • மீன் சந்தை மற்றும் கடைத்தொகுதி
    1. பிரதான வீதி ஓட்டமாவடியில் காணப்படுகிறது.
    2. 42 கடைத் தொகுதியில் அரைவாசி மீன் மற்றுமோர் அரைவாசி பிரிவு உலர்த்திய மீன் வியாபாரம்
    3. குத்தகை காலம் நிறைவேறும் போது விலை மனுக்கோரல் மூலமாக நேரடியாக சபையில் பெற்றுக்கொள்ளலாம்

  • மாட்டிறைச்சி கடைகள்
    1. 17 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது
    2. நடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)

  • ஆட்டு இறைச்சி கடைகள்
    1. 3 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது.
    2. நடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)

  • தற்காலிக கோழி இறைச்சி கடைகள்
    1. 25 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது
    2. நடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)

      • மேலதிகமாக விண்ணப்பிப்பவர்களுக்கு 14 நாட்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்க முடியும் இவ் அனுமதியில் எவையேனும் முறைப்பாடுகள் இல்லாவிடில் மீண்டும் மூன்று முறை 14 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் இவ் அனுமதியில் எவையேனும் முறைப்பாடுகள் இல்லாவிடில் அனுமதி அடுத்த ஆண்டில் நிரந்தரம் ஆக்கப்படும்

  • வாகன வசூல்
    1. பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வியாபார நோக்கத்துடன் வாகனங்களை தடுத்து வைக்கும் போது வாகன தரிப்பிடத்திற்கான கட்டணமாக அறவிடப்படும் இது ஒரு வருட காலத்திற்கு விலை மனு கோரல் மூலமாக வழங்கப்படும்

    இயந்திர பாவணை

  • சபைக்குரிய இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு சபைக்குச் சென்று உரிய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும்
    • (JCB) ஜேசிபி இயந்திரம்
      • ஒரு மணித்தியாலத்திற்கு 3250 ரூபாய்
    • ரோலர் இயந்திரம்
      • ஒரு மணித்தியாலத்திற்கு 1500 ரூபாய்
    • வாட்டர் டேங்க்
      • -ஒருநாள் அலுவலக நேரம் 1500
      • (டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒரு லீட்டர் தண்ணீருக்கு 2 ரூபாய்)
      • சபையில் 3000 லீட்டர் டேங்க் மற்றும் 6000 லீட்டர் தான் காணப்படுகிறது
    • கழிவகற்றல் இயந்திரம்
      • 5000 ரூபாய்
    • உழவு இயந்திரம்
      • தனிப்பட்ட முறையில் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு 2000ரூபாய்

    விலை மனுக்கோரல்

  • விலை மனுக்கோரல் ஆனது வருடாந்தம் வழங்கக்கூடிய குறிப்பிட்ட சில வியாபார நிலையங்களுக்கு உரியதாக காணப்படும்
    1. மாட்டிறைச்சி கடைகள்
    2. கோழி இறைச்சி கடைகள்
    3. ஆட்டு இறைச்சி கடைகள்
    1. வருடாந்தம் விலை மனுக்கோரல்
    2. நடப்பாண்டின் இறுதிப்பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விலை மனுக்கோரல் பகிரங்கமாக அறிவித்தல் விடப்படும். இதன்போது கேள்வி படிவம் கட்டணமும் மீளளிப்பு செய்யக்கூடிய கட்டணமாக அறவீடுகள் இடம்பெற்று உறுதிப்படுத்திய பின்னர் விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும்

    3. மூன்று வருடத்திற்கு மான விலை மனுக்கோரல்
    4. தேவைக்கு ஏற்ப விலை மனுக்கோரல்

    Our Vission / தொலைநோக்கு

  • மக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை
  • Our Mission/பணிநோக்கு

  • சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்
  • purpose/நோக்கம்

    1. பிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்
    2. சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
    3. உரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்
    4. நிலைபேறான அபிவிருத்தியை செயற்படுத்தல்